கடந்த தினங்களில் இத்தாலியில் இருந்து இந்தியாவின் Amritsar நகருக்கு வந்திருந்த இரண்டு விமானங்களில் மிகையான பயணிகள் கரோனா தெற்றி இருந்ததாக இந்திய பரிசோதனை அறிந்து இருந்தது. ஆனால் அந்த பரிசோதனை மீது தற்போது சந்தேகம் எழுந்துள்ளது.
இத்தாலியில் இருந்து இந்தியா வரும் விமான பயணிகள் பயணத்தின் முன், ஆனால் 72 மணித்தியாலத்துள், கரோனா தொற்று இல்லை என்பதை அறியும் PCR வகை பரிசோதனை செய்திருக்க வேண்டும் என்ற விதிக்கு அமைய இத்தாலியின் மிலான் (Milan) நகரில் இருந்து வந்த பயணிகள் அனைவரும் பரிசோதனை செய்து இருந்தனர்.
ஆனால் அவர்கள் இந்தியா வந்தவுடன் இந்தியாவில் இயங்கும் SpiceHealth என்ற நிறுவனம் மீண்டும் பயணிகளை பரிசோதனை செய்து இருந்தது. SpiceHealth செய்த பரிசோதனை இரண்டு விமானங்களில் வந்தவருள் சுமார் 300 பேருக்கு கரோனா இருந்ததாக கூறியது. தற்போது SpiceHealth பரிசோதனை மீது சந்தேகம் எழுந்துள்ளது.
SpiceHealth தற்போது கரோனா பரிசோதனையில் இருந்து விலக்கப்பட்டு உள்ளது என்கிறது Amritsar நகர சுகாதார திணைக்களம். SpiceHealth தனது சேவையை 2020ம் ஆண்டு நவம்பர் மாதமே ஆரம்பித்ததாக தனது இணையத்தில் கூறுகிறது.
சாதாரண விமான சேவைகள் தற்போதும் கட்டுப்பாட்டில் இருக்கையில், மேற்படி இரண்டு விமானங்களும் தனியாரால் ஒழுங்கு செய்யப்பட்டன.