கசகஸ்தான் என்ற மத்திய ஆசிய நாட்டில் அரசுக்கு எதிரான வன்முறைக்கு பலர் பலியாகி உள்ளனர். எரிபொருள் விலை உயர்வுக்கு எதிரான போராட்டம் இறுதியில் வன்முறையை அடைந்துள்ளது. பலியானோரில் 12 போலீசாரும் அடங்குவர்.
அரசுக்கு உதவும் நோக்கில் ரஷ்ய படைகள் கசகஸ்தான் நகரான Almaty யை அடைந்துள்ளன. ரஷ்ய படை நகர்வை ஐரோப்பிய ஒன்றியம் கண்டித்து உள்ளது.
சோவியத்தில் அங்கம் கொண்டிருந்த கசகஸ்தான் தற்போது ரஷ்யாவின் இரண்டாவது பெரிய நட்பு நாடு. சோவியத் கால அதிகாரியான Nursultan Nazarbayev, சோவியத் உடைந்த பின் சுமார் 30 ஆண்டுகள் இந்த நாட்டை ஆட்சி செய்திருந்தார்.
முன்னாள் சோவியத் நாடுகளான ரஷ்யா, கசகஸ்தான், Belarus, Tajikistan, Kyrgyzstan, ஆர்மீனியா ஆகிய நாடுகள் Collective Security Treaty Organization (CSTO) என்ற அமைப்பில் அங்கம்.