இந்த மாதம் 17ம் திகதி இடம்பெறவுள்ள Australian Open என்ற டென்னிஸ் போட்டியில் பங்கு கொள்ள சென்ற Serbia நாட்டு வீரரான Novak Djokovic அஸ்ரேலியாவுள் நுழைய அனுமதி வழங்கப்படவில்லை. இவர் திருப்பி அனுப்படுவதற்காக காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.
இவரிடம் உரிய விசா இருந்தாலும், விசா விதிக்கு இணங்க கரோனா தடுப்பு ஊசி பெற்றமைக்கான ஆதாரங்களோ அல்லது சட்டப்படி விதிவிலக்கு பெற்ற ஆவணங்களோ இருந்திருக்கவில்லை.
கடந்த ஆண்டு இவர் கரோனா தடுப்பு ஊசிக்கு எதிராக கருத்து தெரிவித்து இருந்தவர்.
மொத்தம் 26 வீரர்களில் வேறு சிலர் ஊசிக்கு விலக்கு (exemption) பெற்று இருக்கையில் ஏன் Djokovic அவ்வாறு விலக்கு பெறவில்லை, அவர் முறைப்படி விண்ணப்பிக்கவில்லையா என்ற கேள்விகளுக்கு இன்னமும் பதில் இல்லை.
இவர் அஸ்ரேலியாவில் தடுப்பூசி பெற்று, மீண்டும் விசாவுக்கு விண்ணப்பித்து போட்டியில் பங்கு கொள்வாரா அல்லது Serbia திரும்புவாரா என்பது பின்னர் அறியப்படும்.
Djokovic இதுவரை 9 தடவைகள் டென்னிஸ் போட்டிகளை வென்று இருந்தவர்.
அஸ்ரேலியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட சுமார் 90% மக்கள் கரோனா தடுப்பு ஊசி பெற்று உள்ளனர்.