சீன ஒலிம்பிக்கை அமெரிக்கா அரசியல் புறக்கணிப்பு

சீன ஒலிம்பிக்கை அமெரிக்கா அரசியல் புறக்கணிப்பு

அடுத்த ஆண்டு பெய்ஜிங்கில் இடம்பெறவுள்ள 2002 Winter Olympic போட்டியை அரசியல் அளவில் புறக்கணிக்க அமெரிக்கா தீர்மானித்து உள்ளது. இது வெறும் அரசியல் நாடகமே. அமெரிக்க அரசியவாதிகள் பெய்ஜிங் செல்லாவிடினும் அமெரிக்க போட்டியாளர் பெய்ஜிங் சென்று போட்டிகளில் பங்கு கொள்வர்.

இந்த புறக்கணிப்பு ஒன்றும் புதியது அல்ல. நல்ல உறவு கொண்ட இரண்டு நாடுகளுக்கு இடையில் தோன்றிய புதியதொரு பிளவு அல்ல இது. ஏற்கனவே சீன எதிர்ப்பு வசைபாடும் அமெரிக்க அரசியல்வாதிகள் மேலும் ஒரு வசைபாடலையே செய்கின்றனர். அத்துடன் இது ஒரு முழுமையான புகறக்கணிப்பும் அல்ல.

அதுமட்டுமன்றி கரோனா காரணமாக போட்டியாளர் தவிர்ந்தோருக்கு சீனா விசா வழங்காது என்று ஏற்கனவே கூறியுள்ளது. போட்டியாளரின் உறவினர் உட்பட ஏனையோர் 2022 ஒலிம்பிக் போட்டிக்கு செல்வது தடுக்கப்பட்டு உள்ளது. அதனால் விரும்பினாலும் அமெரிக்க அரசியல்வாதிகள் பெய்ஜிங் செல்ல முடியாது.

பாலஸ்தீனருக்கு இஸ்ரேல் செய்வதை வருடிக்கொடுக்கும் அமெரிக்க அரசியல்வாதிகள் Xinjiang பகுதியில் சீனா செய்வதையிட்டு அழுவது வெறும் அரசியல் நாடகமே.

அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக மேலும் சில மேற்கு நாடுகள் பெய்ஜிங் ஒலிம்பிக்கை அரசியல் அளவில் புறக்கணிக்கலாம்.