Better.com என்ற வீட்டு அடமான நிறுவனத்தின் (online mortgage company) தலைமை அதிகாரி (CEO) Vishal Garg தனது 900 ஊழியர்களை Zoom அமர்வுக்கு அழைத்து 900 பேரும் வேலைவாய்ப்பை உடனடியாக இழப்பதாக கூறியுள்ளார்.
அமர்வுக்கு அழைக்கப்பட்டவர்களிடம் “if you are on this call, you are part of the unlucky group that being laid off” என்றும் “your employment here is terminated effective immediately” என்றும் கூறியுள்ளார் அந்த CEO.
தம்மை வேலையில் இருந்து நீக்கத்தான் Zoom அமர்வுக்கு அழைக்கப்பட்டனர் என்பதை ஊழியர் அறிந்து இருக்கவில்லை. இதனால் 900 ஊழியர் திகைப்பு அடைந்து உள்ளனர். வேலை இழந்தோர் தொகை அந்த நிறுவனத்தின் மொத்த ஊழியர் தொகையின் சுமார் 15% என்று கூறப்படுகிறது.
சில ஊழியர்கள் தினமும் 2 மணித்தியாலங்கள் மட்டுமே பணி செய்வதாக மேற்படி CEO முன்னர் குற்றம்சாட்டி இருந்ததாகவும் கூறப்படுகிறது.
Softbank என்ற முதலீட்டு நிறுவனத்தின் உதவியுடன் இயங்கும் Better.com என்ற இந்த அமெரிக்க நிறுவனம் சுமார் $7 பில்லியன் பெறுமதியான வீடுகளுக்கு mortgage வழங்கி வருகிறது.