இந்தியாவின் கிழக்கு மாநிலமான நாகலாந்து பகுதில் உள்ள Oting என்ற கிராமத்தில் சனிக்கிழமை இந்திய இராணுவம் தவறாக செய்த தாக்குதல் ஒன்றுக்கு 13 பொதுமக்களும், 1 இராணுவத்தினரும் பலியாகி உள்ளனர்.
சுரங்கம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர் வீடு திரும்புகையில் அவர்களை நாகலாந்து ஆயுத குழு என்று தவறாக கருதியே இந்திய இராணுவம் மறைந்து இருந்து தாக்கி உள்ளது. இந்திய, பர்மா எல்லையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்று உள்ளது.
இராணுவத்தின் தாக்குதலுக்கு முதலில் 6 பேர் பலியாகி இருந்தனர். தவறான தாக்குதலை அறிந்த பொதுமக்கள் இராணுவத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த போது மேலும் 7 பொதுமக்களும், 1 இராணுவத்தினரும் பலியாகி உள்ளனர். இந்த சம்பவத்தை தாம் விசாரணை செய்யவுள்ளதாக இந்திய அரசு கூறி உள்ளது.
நாகலாந்து பிரிவினைவாதிகள் இந்திய இராணுவத்துக்கு எதிராக நீண்டகாலமாக போராடி வருகின்றனர்.
பங்களாதேசத்துக்கு கிழக்கே உள்ள அசாம், மேகாலயா, திரிபுரா, அருணாச்சல் பிரதேசம், மிசோராம், மணிப்பூர், நாகலாந்து ஆகிய 7 மாநிலங்களில் இந்திய மத்தியை எதிர்த்து பல ஆயுத குழுக்கள் போராடி வருகின்றன.