கேள்விக்குறியாகும் கமலா ஹாரிஸின் அரசியல் எதிர்காலம்

கேள்விக்குறியாகும் கமலா ஹாரிஸின் அரசியல் எதிர்காலம்

அமெரிக்க உதவி சனாதிபதி கமலா ஹாரிஸின் அரசியல் எதிர்காலம் மெல்ல மங்கி வருகிறது. சனாதிபதி பைடெனின் ஆதரவும் மங்கி வந்தாலும், அவரின் வயது காரணமாக அவரின் அரசியல் எதிர்காலத்தையிட்டு எவரும் அதிகம் அக்கறை கொள்ளவில்லை. ஆனால் கமலா ஹாரிசின் நிலை அவ்வாறு அல்ல.

ஹாரிஸ் ஆட்சிக்கு வந்து ஒரு ஆண்டுக்கு முடிவதற்குள் அவரின் இரண்டு பிரதான அதிகாரிகள் தமது பதவிகளை விட்டு விலகி உள்ளனர். Ashley Etienne என்ற communication director இரண்டு கிழமைகளுக்கு முன்னர் தனது பதவியில் இருந்து விலகுவதாக கூறி உள்ளார். Symone Sanders என்ற முதன்மை பேச்சாளரும் தனது பதவியில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார்.

சனாதிபதி பைடென் நிர்வாகத்துடனும் ஹாரிஸ் நிர்வாகம் முரண்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இரு தரப்பும் மாரு தரப்பை சந்தேக கண்ணோடே பார்க்கின்றனர்.

ஹாரிஸின் சராசரின் Approval அளவும் 36.8% ஆக குறைந்தும், சராசரி Disapproval அளவு 49.2% ஆகி அதிகரித்தும் உள்ளது.

அதேவேளை பைடெனின் Approval அளவு 45% ஆகவும், Disapproval அளவு 52% ஆகவும் உள்ளது. இந்த அளவு ஆதரவையும் பெருமைக்குரியது அல்ல.