பிரான்சின் உதவியுடனேயே எகிப்து மக்களை கொன்றது

பிரான்சின் உதவியுடனேயே எகிப்து மக்களை கொன்றது

பிரான்ஸ் வழங்கிய உளவுகளை பயன்படுத்தியே எகிப்து பொதுமக்களை விமான தாக்குதல்கள் மூலம் கொலை செய்தது என்று கூறுகிறது Disclose என்ற புலனாய்வு வெளியீடு. இது தொடர்பாக கருத்து கூற பிரான்ஸ் மறுத்து வருகிறது.

எகிப்துக்கு மேற்கே உள்ள லிபியாவில் தற்போது இடம்பெறும் யுத்தம் வெளிநாடுகளின் கைவரிசையை. அங்கு உள்ள எண்ணெய்வளமும் வெளிநாடுகள் லிபியாவை நாட காரணம். லிபியாவில் இருந்த சர்வாதிகாரி கடாபியை விரட்டிய மேற்கு நாடுகள் அங்கு தமது பொம்மை அரசை அமைக்க முயன்று வருகின்றன. அதிலும் இரண்டு பகுதிகள் உண்டு. ஒன்றை பிரான்சும், எகிப்தும் ஆதரிக்கின்றன.

எகிப்தின் சர்வாதிகாரி சிசிக்கு இராணுவ ஆதரவு வழங்கி வருகிறது பிரான்ஸ். அதன் ஒரு அங்கமே எல்லையோரங்களில் உளவு செய்து தரவுகளை எகிப்தின் இராணுவத்துக்கு வழங்குவது. 2016ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை பிரான்ஸ் வழங்கிய உளவு உதவிகள் எகிப்து பொதுமக்கள் படுகொலை செய்ய காரணமாக இருந்துள்ளன என்று கூறுகிறது Disclose.

சாதாரண பொதுமக்கள் தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்தும் பொழுதே அவர்கள், பிரான்ஸ் வழங்கிய உளவுவின் அடிப்படையில், எகிப்திய விமானப்படையால் தாக்கி கொலை செய்யப்பட்டு இருந்தனர் என்று கூறுகிறது Disclose.

மற்றைய நாடுகளில் சர்வாதிகாரிகள் ஆட்சியை கைப்பற்றுகிறார்கள் என்று அழும் பிரான்ஸ் சிசி என்ற எகிப்தின் சர்வாதிகாரிக்கு 2014ம் ஆண்டின் பின் Rafale யுத்த விமானங்கள், யுத்த கப்பல்கள், ஹெலி தாங்கும் கப்பல்கள் என்பவற்றை விற்பனை செய்துள்ளது.

2020ம் ஆண்டு பிரான்சின் சனாதிபதி Macron எகிப்தின் சர்வாதிகாரி சிசிக்கு Grand Cross of the Legion of Honor விருதையும் வழங்கி இருந்தார்.

உலகின் பெருமளவு சர்வாதிகாரிகள் மேற்கின் ஆதரவுடனேயே பதவிக்கு வந்து ஆட்சியில் உள்ளனர்.