Amazon என்ற அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனம் பல தொழில்நுட்ப சேவைகளை மக்களுக்கு வழங்கி வருகின்றது. அதன்மூலம் Amazon தனது வாடிக்கையாளரின் தரவுகளை முன்னறிவிப்பு இன்றி சேகரித்தும் வருகின்றத.
இந்த உண்மையை அறிந்த Ibraheem Samirah என்ற அமெரிக்காவின் Virginia மாநிலத்து அரசியல்வாதி அண்மையில் Amazon சேகரித்த தனது விபரங்களை பகிரங்கம் செய்துள்ளார். இவர் Amazon நிறுவனத்தின் சில சேவைகளை பெற்ற காலத்திலேயே தரவுகள் சேகரிக்கப்பட்டு உள்ளன.
இவருக்கு தெரிந்தவர்கள் 1,000 பேரின் தொலைபேசி இலக்கங்களை Amazon சேகரித்து வைத்துள்ளது. இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் குர்ரானில் (Quran) கேட்ட பதிவுகளையும் Amazon சேகரித்து வைத்துள்ளது. இவர் தேடிய புத்தகங்களின் பெயர்களையும் Amazon சேகரித்து வைத்துள்ளது.
இதை விசாரிக்க முயன்ற Reuters செய்தி நிறுவன நிருபர் ஒருவர் தனது விசயங்கள் எவ்வளவை Amazon சேகரித்து வைத்துள்ளது என்பதை அறிந்தபோது, இந்த நிருபரின் வீட்டு Alexa என்ற தொழில்நுட்ட சேவை சுமார் 90,000 உரையாடல்களை சேகரித்து உள்ளமையை அறிந்துள்ளார். இந்த உரையாடல்கள் டிசம்பர் 2017 முதல் ஜூன் 2021 வரை இடம்பெற்றவை. அதவாது நாளுக்கு சுமார் 70 உரையாடல்களை Amazon சேகரித்து வைத்துள்ளது.
இந்த சேவை “Alexa” என்ற சொல்லை கூறிய பின்னரே ஒளிப்பதிவை ஆரம்பிக்கும் என்று Amazon கூறினாலும், Alexa என்ற சொல்லுடன் ஆரம்பிக்காத உரையாடல்களும் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இது சிறுவர்களின் உரையாடல்களையும் பதிவு செய்துள்ளது.
Amazon வழங்கும் முன் கதவுகளில் பொருத்தப்படும் Door Bell என்ற சேவை மூலம் ஒவ்வொரு வீட்டுக்கு வருபவரின் வீடியோகளையும் சேகரித்து வைத்துள்ளது.