போலாந்துக்கும் (Poland), பெலரூஸுக்கும் (Belarus) இடையிலான எல்லை குதியில் பல்லாயிரம் அகதிகள் குவிந்து வருகின்றனர். இந்த அகதிகளின் குவிவால் போலாந்து, லித்துவேனியா (Lithuania), லத்வியா (Latvia) ஆகிய நாடுகள் NATO நாடுகளின் உதவியை நாடி உள்ளன.
நேட்டோ அணியில் அங்கம் கொண்ட மேற்படி மூன்று நாடுகளும் நேட்டோ அணியின் Article 4 ஐ நடைமுறை செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்படி ஒரு நேட்டோ நாடு ஆபத்தில் இருந்தால் ஏனைய நேட்டோ நாடுகள் ஆபத்தில் உள்ள நாட்டுக்கு உதவ முன்வரவேண்டும்.
ரஷ்யா பக்கம் சாய்ந்து, ரஷ்யாவின் பாதுகாப்பில் உள்ள பெலரூஸ் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணிக்கும் அகதிகளுக்கு உதவி வருகின்றது. ஐரோப்பிய ஒன்றியம் தன் மீது விதித்துள்ள தடைகளால் விசனம் கொண்ட பெலரூஸ் அகதிகளை ஏற்றி சென்று தனது எல்லையில் விடுவதாக போலந்து குற்றம் சாட்டி உள்ளது.
அகதிகளை பயன்படுத்தி தன் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை விலக்க பெலரூஸ் முனைகிறது என்று கருதப்படுகிறது. இந்த அகதிகளில் பலர் ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் இருந்து பயணித்தவர்.
இப்பகுதியில் தற்போது winter காலம் ஆகையால் அகதிகள் உறையும் குளிரின் இடரில் உள்ளனர். உறையும் குளிருக்கு பலர் பலியாகியும் உள்ளனர்.
ரஷ்ய சனாதிபதி பூட்டின் பிரெஞ்சு சனாதிபதியுடனும், ஜெர்மன் அதிபர் பெலரூஸ் சனாதிபதியுடனும் அகதிகள் விசயம் தொடர்பாக உரையாடி உள்ளனர்.