இந்தியா விரைவில் 180 நாட்டு பிரசைகளுக்கு இந்தியாவை வந்தடையும்போது 30-நாள் விசா வழங்கவுள்ளது. உல்லாச பயணிகளிடம் இருந்து பெறும் வருமதியை அதிகரிப்பதே இந்த நடவடிக்கைக்கு காரணம். இந்த வசதி சிங்கப்பூர், ஜப்பான், வியட்னாம், பிலிப்பீன், பர்மா, நியூ சீலாந்து, பின்லாந்து, கம்போடியா உட்பட்ட 11 நாடுகளுக்கு ஏற்கனவே உள்ளது.
ஆனால் இந்த சலுகை இலங்கை, பாகிஸ்தான், ஈரான், ஈராக், சீனா, ஆப்கானிஸ்தான், சோமாலியா, நைஜீரியா மற்றும் சுடான் போன்ற எட்டு நாட்டவருக்கு வழங்கபப்பட மாட்டாது. இந்த எட்டு நாட்டவரும் முன்கூட்டியே விசா பெற்ற பின்னரே இந்தியா செல்லல் அவசியம்.
இந்த புதிய நடைமுறைக்கு வசதியாக இலங்கையில் உள்ளது போல் ஒரு internet வழியான ETA முறை அடுத்த 6 மாதங்களில் அமைக்கப்படும். புதிய முறைக்கு உட்பட்ட 180 நாட்டு பயணிகள் இந்தியா போக விரும்பின், அவர்கள் ETA மூலம் தமது விபரத்தை கொடுத்துவிட்டு இந்தியாவில் தரையிறங்கும்போது விசாவை பெற்றுக்கொள்ளலாம்.
ஆரம்பத்தில் இந்த வரவின் போதான விசா டெல்லி, மும்பை, சென்னை, கல்கத்தா, கொச்சின், ஹைதராபாத், கோவா, திருவானந்தபுரம் ஆகிய 8 விமான நிலையங்களில் மட்டுமே வழங்கப்படும்.