Global Hunger Index என்ற அமைப்பின் இந்த ஆண்டுக்கான கணிப்புக்கு மொத்தம் 116 நாடுகள் உள்ளடக்கப்பட்டு இருந்தன. இந்த கணிப்பில் இந்தியா 101ம் இடத்தில் உள்ளது. இதனால் விசனம் கொண்ட இந்தியா இந்த கணிப்பு விஞ்ஞான முறைக்கு முரணானது என்று சாடியுள்ளது. கடந்த முறை இந்தியா 94ம் இடத்தில் இருந்தது.
இந்த கணிப்பின்படி 0 சுட்டி பெறும் நாட்டில் பட்டினியே இல்லை, 100 சுட்டி பெறும் நாடு முற்றாக பட்டினியில் உள்ளது. இந்த ஆண்டு இந்தியா 27.5 சுட்டியை பெற்றுள்ளது.
இலங்கை 16 சுட்டியை பெற்று 65ம் இடத்தில் உள்ளது. தெற்கு ஆசியாவில் இலங்கையே முன் நிலையில் உள்ளது.
பங்களாதேசம், நேபாள் ஆகிய இரண்டு நாடுகளும் 19.1 சுட்டி பெற்று 76ம் இடத்தில் உள்ளன.
பாகிஸ்தான் 24.7 சுட்டி பெற்று 92ம் இடத்தில் உள்ளது.
சீனா, துருக்கி ஆகிய நாடுகள் உட்பட 18 நாடுகள் 5க்கும் குறைவான சுட்டியை பெற்று முதலாம் இடத்தில் உள்ளன. செல்வந்த நாடுகள் கணிப்புக்கு உட்படவில்லை.
உணவின் தரம், சிறுவர்களின் உயரத்துக்கான எடை, போசாக்கு இன்மையால் ஏற்படும் சிறுவர்களின் மரணம் போன்றன மேற்படி கணிப்பில் கொள்ளப்பட்டு உள்ளன.