எல்லையில் இந்தியாவும், சீனாவும் முரண்டு செய்தாலும் இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மிக வேகமாக வளர்ந்து உள்ளது என்பதை வர்த்தக தரவுகள் காட்டுகின்றன. இரு நாடுகளுக்கும் இடையில் இந்த ஆண்டுக்கான மொத்த வர்த்தகம் $100 பில்லியனை மீறும் என்று கணிப்பிடப்படுகிறது.
இந்த ஆண்டின் முதல் மூன்று காலாண்டிலும் (முதல் 9 மாதங்களில்) இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான வர்த்தகம் $90.37 பில்லியன் ஆக இருந்துள்ளது. கடந்த ஆண்டின் முதல் 9 மாத கால தொகையுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் தொகை 49.3% ஆல் அதிகரித்து உள்ளது.
இந்த ஆண்டின் முதல் 9 மாத காலத்தில் சீனாவில் இருந்து இந்தியாவுக்கான ஏற்றுமதி $68.46 பில்லியன் ஆக இருந்துள்ளது. இத்தொகை முன்னைய ஆண்டிலும் 51.7% அதிகம்.
இதே காலத்தில் இந்தியாவில் இருந்து சீனாவுக்கான ஏற்றுமதி $21.91 பில்லியன் ஆக இருந்துள்ளது. இத்தொகை முன்னைய ஆண்டிலும் 42.5% அதிகம்.
அதனால் இந்திய வர்த்தகம் மூலம் சீனா $46.55 பில்லியன் மேலதிக வருமானம் அடைந்துள்ளது. இந்நிலை நீண்டகாலமாக தொடர்கிறது.
ASEAN, ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய மூன்று தரப்புகளுடனான சீனாவின் வர்த்தகங்களும் முறையே 21.1%, 20.5%, 24.9% வீதங்களால் அதிகரித்து உள்ளன.