பிரதமர் மோதியின் ஆட்சியில் உள்ள அமைச்சரின் (junior Home Minister) மகனை போலீசார் இன்று சனிக்கிழமை கைது செய்துள்ளனர். மோதி அரசு நடைமுறை செய்யும் புதிய சட்டம் ஒன்றை எதிர்த்து போராடும் உழவர் ஊடே வாகனம் ஒன்றை செலுத்தி 4 உழவர் பலியாக காரணமாக இருந்ததே கைதுக்கு காரணம்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை Ajay Mishra மேற்படி அமைச்சருக்கு உரிய காரை உத்தர பிரதேசத்தில் உள்ள Lakhimpur Kheri என்ற இடத்தில் போராடும் உழவர் மீது செலுத்தியதில் 4 உழவர் பலியாகி இருந்தனர். அமைச்சரின் மகனான Ashish Mishra காரில் இருந்துள்ளார் என்று உழவர் கூறியுள்ளனர். காரில் மகன் இருந்ததை அமைச்சரும், மகனும் மறுத்திருந்தாலும், போலீசார் மகனின் கூற்றை ஏற்றுக்கொள்ளவில்லை.
விபத்தின் பின் அந்த காரின் சாரதியும், அதில் பயணித்த 3 பா.ஜ. ஆதரவாளரும் போராடும் உழவர்களால் அடித்து கொலை செய்யப்பட்டும் உள்ளனர்.
அவ்விடத்தில் ஒரு பத்திரிகையாளர் உடல் ஒன்றும் காணப்பட்டு இருந்தாலும் அவரின் மரணத்துக்கு காரணம் இதுவரை அறியப்படவில்லை.
உழவர்கள் கடந்த ஒரு ஆண்டு காலமாக மோதி அரசின் உழவர் தொடர்பான சட்டம் ஒன்றை எதிர்த்து போராடுகின்றனர்.