Belarus, Lithuania ஆகிய நாடுகளின் எல்லை பகுதில் இலங்கையர் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இவரின் பெயர் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்றாலும், இவரிடம் இருந்த ஆவணங்களின்படி இவர் இலங்கையர் என்றும், 29 வயதுடையவர் என்றும் கூறப்பட்டு உள்ளது.
Belarus நாட்டின் Polotsk பகுதி போலீசார் விசாரணையை ஆரம்பித்து உள்ளனர்.
இந்த உடல் அக்டோபர் 5ம் திகதி Lithuania புதருள், எல்லையில் இருந்து 500 மீட்டர் தூரத்தில், காணப்பட்டு உள்ளது. இவருடன் ஒரு தொலைபேசியும், வங்கி அட்டைகளும், சில ஆவணங்களும் இருந்துள்ளன.
அண்மை காலங்களில் Lithuania அந்நாட்டுள் வரும் அகதிகளை பலவந்தமாக வெளியேற்றி வருகிறது. அவ்வகை அகதிகளுள் ஒருவரே மேற்படி இலங்கை அகதியும் என்று கருதப்படுகிறது.
ரஷ்யா சார்பு Belarus தனது நாட்டின் ஊடாக அகதிகள் மேற்கு நாடுகளுக்கு செல்வதற்கு அனுமதித்து வருகிறது. Belarus மீது மேற்கு நாடுகள் பெரும் தடைகளை விதிப்பதே Belarusசின் மேற்படி செயற்பாட்டுக்கு காரணம்.