இன்று ஜேர்மனியில் இடம்பெற்ற தேசிய தேர்தலில் உலகம் எங்கும் நன்மதிப்பு பெற்ற அங்கெலா மேர்கலின் (Angela Merkel) கட்சியை பின்தள்ளி, Social Democratic Party (SPD) சில ஆசனங்களால் முன்னணியில் உள்ளது. ஆனாலும் முன்னணியில் உள்ள SDP கட்சிக்கு சுமார் 25.8% வாக்குகள் மட்டுமே கிடைக்கின்றன.
எந்தவொரு கட்சியும் ஆட்சி அமைக்க தேவையான ஆசனங்களை கொண்டிரா. அதனால் ஒரு கூட்டணி ஆட்சியே இம்முறையும் அங்கு இடம்பெறும். கடந்த 8 ஆண்டுகள் CDU, SPD கூட்டணியே ஆட்சி செய்திருந்தது.
அங்கெலா மேர்கலின் கட்சியான CDU (Christian Democratic Union) முன்னரிலும் குறைவான ஆசனங்களையே இம்முறை வெல்கிறது. CDU கட்சிக்கு சுமார் 24.1% வாக்குகள் மட்டுமே கிடைக்கின்றன. கடந்த 70 ஆண்டுகளில் CDU பெறும் மிக குறைந்த ஆதரவு இது.
உலக சூழலில் நாட்டம் கொண்ட Greens கட்சி 14% ஆதரவுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது.
கூட்டணி பேச்சுவார்த்தை நீண்ட காலம் இழுபடலாம். 2017ம் ஆண்டு தேர்தலின் பின்னான கூட்டணி பேச்சுவார்த்தை 6 மாதங்கள் இழுபட்டன.