NSA (National Security Agency) என்ற அமெரிக்காவின் உளவு நிறுவனத்தின் நடவடிக்கைகள் தேசிய பாதுகாப்பு காரணமானது மட்டும்தான் என்று கூறினாலும் முன்னாள் NSA ஊழியர் Edward Snowden கருத்துப்படி NSA பொருளாதார உளவுகளிலும் ஈடுபட்டுள்ளது. இவரின் கூற்று குறிப்பாக ஜேர்மன் நிறுவனமான Siemens அடையாளம் கண்டுள்ளது.
ஜேர்மன் தொலைக்காட்சி நிறுவனமான ARD TV உடனான உரையாடல் ஒன்றில் Snowden “அங்கே (Siemens இல்) அமெரிக்க நலனுக்கு தகுந்த தரவுகள் இருந்திருந்தால் – அவை அமெரிக்க பாதுகாப்பு சம்பந்தப்பட்டவை அல்ல என்றாலும் – அவர்கள் (NSA) அந்த தரவுகளை எடுத்திருப்பார்கள்” என்றுள்ளார்.
அண்மையில் New Times வெளியிட்ட தகவல்களின்படி NSA 2008 ஆம் ஆண்டு முதல் Quantum என குறியிடப்பட்டுள்ள உளவு முறை Internet இக்கு இணைக்கப்படாத கணனிகளில் இருந்துகூட தரவுகளை களவாடவல்லது. இந்த பொறிமுறை ஒரு சிறிய circuit ஐ குறிவைக்கப்படும் கணணியுள் புகுத்திவிடும். இதை செய்வது மட்டுமே சிறிது கடினம். ஆனால் அதன் பின்னர் இந்த கணனியில் புதைக்கப்பட்ட இந்த கருவி அக்கணனியில் உள்ள தரவுகளை ரேடியோ அலைகள் (radio signal) மூலம் பரப்பு (broadcast) செய்யும். இந்த பரப்பை NSA இனது விசேட கருவி அண்மை இடம் ஒன்றில் இருந்து சேகரிக்கும். இந்த கருவி இந்தியா, பாகிஸ்தான், ரஷ்யா, சீன போன்ற பல நாடுகளில் புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.