மேற்கு ஆபிரிக்க நாடான கினியில் (Guinea) இராணுவம் கவிழ்ப்பு மூலம் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. அந்நாட்டின் முன்னைய சனாதிபதி Alpha Conde, வயது 83, தற்போது எங்குள்ளார் என்பது அறியப்படவில்லை.
ஞாயிற்றுக்கிழமை அங்குள்ள தொலைக்காட்சி சேவை மூலம் தாம் ஆட்சியை கைப்பற்றி உள்ளதாக இராணுவம் கூறியுள்ளது. தம்மை National Committee for Reconciliation என்றும் இராணுவம் பெயரிட்டு உள்ளது. இந்த இராணுவ கவிழ்ப்பை Lt Col Mamady Doumbouya செய்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
இயற்கை வளமும், கனியங்களும் நிறைந்திருந்தாலும் ஊழல், இலஞ்சம் காரணமாக நாடு வறுமையில் உள்ளது.
1958ம் ஆண்டு பிரான்சிடம் இருந்து சுதந்திரம் அடைந்திருந்த இது முன்னர் Republique de Guinee என்றும் அழைக்கப்பட்டது.
அருகில் உள்ள மாலி (Mali) என்ற நாட்டில் இராணுவம் 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆட்சியை கைப்பற்றி இருந்தது.