கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்கா ஆயுதம், அறிவு, பயிற்சி வழங்கி வளர்த்த ஆப்கானிஸ்தான் அரச படைகள் இவ்வளவு விரைவாக தோற்றுப்போகும் என்று தாம் நம்பியிருக்கவில்லை என்று அமெரிக்க படைகளின் தலைவர் Mark Milley இன்று புதன் கூறியுள்ளார்.
Joint Chiefs Chairman General Mark Milley தனது உரை ஒன்றில் “There was nothing that I or anyone else saw that indicated a collapse of this army in this government in 11 days” என்று கூறியுள்ளார். பைடென் திடீரென அமெரிக்க படைகளை பின்வாங்க மேற்படி தவறான அறிவு காரணமாக இருந்திருக்கலாம்.
அமெரிக்கா வழங்கிய தரமான ஆயுதங்கள், இராணுவ வாகனங்கள், யுத்த விமானங்கள் எல்லாம் தற்போது தலிபானின் கைகளில் உள்ளன. ஏறக்குறைய எந்தவித எதிர்ப்பும் இன்றி அரச படைகள் தப்பி ஓடியிருந்தன. சனாதிபதி அதற்கு முன்னரே தப்பி ஓடியிருந்தார். அவர் பெருமளவு அரச பணத்தையும், சில வாகனங்களையும் தன்னுடன் எடுத்து சென்றதாகவும் செய்திகள் கூறுகின்றன. விமானத்தில் ஏற்ற முடியாத பண பொதிகள் விமான ஓடுபாதையில் கைவிடப்பட்டு இருந்ததாகவும் செய்திகள் கூறுகின்றன.
தப்பி ஓடிய முன்னாள் ஆப்கானிஸ்தான் சனாதிபதி Ashraf Ghani தற்போது UAE நாட்டில் உள்ளார் என்று UAE இன்று புதன் தெரிவித்து உள்ளது. Qatar நாட்டிலேயே தலிபானின் தலைவர் இதுவரை காலமும் தப்பி ஓடி வாழ்ந்திருந்தார். அவர் தற்போது ஆப்கானிஸ்தான் திரும்பி உள்ளார். UAE அமெரிக்காவுக்கும் உற்ற நண்பன்.