அமெரிக்க CDC (Centers for Disease Control and Prevention) வெளியிட்ட கரோனா தவுகளின்படி முற்றாக கரோனா தடுப்பூசி பெற்றவர்களில் 0.004% மக்களே மீண்டும் கடுமையான delta வகை கரோனா வரைஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைக்கு சென்று உள்ளனர் என்று Kaiser Foundation ஆய்வு கூறுகிறது. இது கரோனா தடுப்பூசியின் வல்லமையை மீண்டும் உறுதி செய்கிறது.
அத்துடன் அவர்களில் 0.001% நோயாளிகளே மரணத்தை தழுவி உள்ளனர்.
மொத்தம் 163 மில்லியன் அமெரிக்கர் முழுமையாக கரோனா தடுப்பூசி பெற்று உள்ளனர். அவர்களில் 6,600 பேருக்கு மட்டுமே மீண்டும் கரோனா தொற்றி உள்ளது.
பல அமெரிக்க மாநிலங்களில் தற்போது கரோனா தொற்றி வைத்தியசாலை செல்வோருள் 98% த்துக்கும் அதிகமானோர் முழுமையாக கரோனா தடுப்பூசி பெறாதவர்களே. அந்த மாநிலங்கள் பொதுவாக முன்னாள் சனாதிபதி ரம்பின் Republican கட்சி ஆதரவு கொண்ட மாநிலங்கள்.
அமெரிக்காவில் 49.6% மக்கள் முற்றாக கரோனா தடுப்பூசி பெற்று உள்ளனர். ஆனால் Republican கட்சியின் கோட்டைகளில் ஒன்றான அலபாமா (Alabama) மாநிலத்தில் அத்தொகை 34% மட்டுமே. அருகில் உள்ள Mississippi மாநிலத்தில் அத்தொகை 35% மட்டுமே.