அண்மையில் கிழக்கு சீன கடலின் மேலான வான் பரப்பில் தனது பாதுகாப்பு வலயம் ஒன்றை உருவாக்கிய சீனா இப்போது தென் சீன கடலில் புதியதோர் கடல் சட்டத்தையும் அறிவித்துள்ளது. இந்த சட்டப்படி சீனாவினால் அடையாளம் காணப்பட்டுள்ள தென் சீன கடல் பரப்புள் நுழையும் மீன் பிடி வள்ளங்கள் சீனாவிடம் முன் அனுமதியை பெற்றிருக்க வேண்டும். ஆனால் இந்த கடல் பரப்பை Philippines, Malaysia, Brunei, Vietnam போன்ற நாடுகளும் உரிமை கொண்டாடுகின்றன.
இந்த புதிய சட்டத்துக்கு அடங்கும் கடல் பரப்பு Spratly மற்றும் Paracel தீவு பகுதிகளையும் உள்ளடக்கும். இந்த சட்டம் இந்த மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த சட்டத்தையும் அமெரிக்கா கண்டித்துள்ளது.
அதேவேளை சீனாவின் அதீத வர்ச்சிக்கு முகம் கொடுக்கவேண்டிய நிலையில் உள்ள அமெரிக்கா இந்தியாவுடன் மோதல்களை தவிர்க்கும் முறையில் சரிசைக்குரிய Devyani யை அமெரிக்காவை விட்டு வெளியேற அனுமதித்துள்ளது. அவ்வாறு Devyani வெறியேறி இந்தியா போனால், அவருக்கு எதிரான வழக்குகளும் கிடப்பில் போய்விடும். Devyani இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட தமது வீட்டு பணிப்பெண்ணுக்கு ஊதியமாக மாதாந்தம் சுமார் $500 வழங்கிவிட்டு கணக்கு புத்தகங்களில் $4500 வழங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.