அமெரிக்காவும், சீனாவும் அரசியல் களத்தில் பெரும் மோதலில் இருப்பதாக தெரிந்தாலும், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் தொடர்ந்தும் வளர்ந்தே செல்கிறது. கரோனா காரணமாக இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்ட வர்த்தக வீழ்ச்சியும் தற்போது மீளப்பட்டு உள்ளது.
ரம்ப் ஆட்சியோ, அல்லது பின்வந்த பைடென் ஆட்சியோ அமெரிக்க-சீன வர்த்தகத்தில் பெரிதாக மாற்றம் எதையும் ஏற்படுத்தவில்லை என்று தரவுகள் கூறுகின்றன.
தென் கொரியா, தாய்வான் ஆகிய இடங்களில் இருந்தான அமெரிக்கான ஏற்றுமதி அதிகரிக்க ஆரம்பித்து இருந்தாலும் இவை சீனாவில் இருந்து அமெரிக்கா செல்லும் ஏற்றுமதியை குறைக்கவில்லை.
ரம்ப் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் $300 பில்லியன் பெறுமதியான பொருட்களுக்கு மேலதிக இறக்குமதி வரி (traffic) அறிவிட்டாலும் அந்த மேலதிக தொகையை மறைமுகமாக அமெரிக்க நுகர்வோரே செலுத்துகின்றனர், ரம்ப் கூறியது போல் சீனா அல்ல.
சீனாவின் ஷாங்காய் துறைமுகத்தில் இருந்து Las Angeles துறைமுகத்துக்கு கொள்கலன் ஒன்றை காவும் கூலி கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது 3 மடங்கு அதிகம். சீன பொருட்களுக்கு அமெரிக்காவில் தொடர்ந்து சந்தை வளர்வதை அது காட்டுகிறது.
ரம்ப் காலத்து வர்த்தக இணக்கம் இந்த ஆண்டு முடிவில் முடிவுறும். அதன் பின் பைடென் எவ்வாறு அமெரிக்க-சீன உறவை கையாள்வார் என்பது இதுவரை தெரியப்படுத்தப்படவில்லை.