அமெரிக்காவின் மற்றும் கனடாவின் பகுதிகள் வழமைக்கும் அதிகமாககடும் குளிரிலும் snowவிலும் மூழ்கியுள்ளது. வழமையாக குளிர் பிரதேசமான வட அகலாங்கு 61.22 இல் உள்ள ஆங்கேராச் அலாஸ்காவை விட (Anchorage, Alaska) அமெரிக்காவின் பல தென் நகரங்கள் கடும் குளிருக்கு உள்ளாகியுள்ளன. உதாரணமாக ஆங்கேராச் வெப்பநிலை சுமார் +35 F (+2 C) ஆக இருக்கையில், வட அகலாங்கு 41.88 இல் உள்ள சிக்காக்கோ (Chicago) வெப்பநிலை -17 F (-27 C), வட அகலாங்கு: 33.75 இல் உள்ள Atlanta வெப்பநிலை +26F (-3 C) ஆகவெல்லாம் உள்ளது.
குளிர் மட்டுமன்றி இங்கெல்லாம் அதிக snow வீழ்ந்துள்ளது. கனடாவின் கிழக்கு எல்லை மாகாணமான New Foundland இல் வெப்பநிலை -35 க ஆகவும் ஒரு இரவில் வீழ்ந்த snow வின் அளவு 40 cm ஆகவும் உள்ளது.
இங்குள்ள பல நகரங்களின் இந்த பருவத்துக்கான snow அப்புறப்படுத்தல் நிதி ஒதுக்கீடு இப்போதே முடிவடையும் நிலையில் உள்ள. ஆனால் குளிர் காலம் மேலும் 3 மாதங்கள் வரை நீடிக்கும். கனேடிய நகரான மொன்றியல் (Montreal) snow அப்புறப்படுத்தலுக்கு வருடாந்தம் சுமார் C$135 மில்லியன் செலவிடுகிறது. சிறிது, பெரிதாக சுமார் 2000 snow அப்புறப்படுத்தல் வாகனங்களும் பயன்படுத்தப்படும்.
படம்: The Weather Channel