செல்வந்தரான (billionaire) Richard Branson, வயது 71, முதலீடு செய்து தயாரித்த Virgin Galactic என்ற தனியார் விண்வெளி கலம் இன்று அமெரிக்காவின் New Mexico மாநிலத்தில் இருந்து வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. அவரும், அவருடன் சென்ற ஏனைய 5 பேரும் பத்திரமாக மீண்டும் தரையை அடைந்தனர்.
சுமார் 17 ஆண்டுகளாக தயாரிக்கப்பட்ட இந்த ஏவல் முறை இரண்டு பிரதான பாகங்களை கொண்டது. தாய் கலம் ஒரு பாரிய விமானம் போன்றது. அது விமானம் போலவே தரையில் இருந்து மேலே சென்றது. அதன் வயிற்று பகுதியில் Galactic Unity 22 என்ற சேய் கலம் இணைக்கப்பட்டு இருந்தது.
தாய் கலம் சுமார் 15 km (50,000 அடி) உயரத்தை அடைந்ததும், சேய் காலத்தை விடுவித்தது. விடுவிக்கப்பட்ட சேய் கலம் சில கணத்தில் தனது ஏவுகணையை இயக்கி பயணத்தை தொடர்ந்தது. உல்லாச பயணிகளை தாங்கி சென்ற சேய் கலம் சுமார் 90 km (55 மைல், அல்லது 295,000 அடி) உயரத்தை அடைந்தது. அங்கே புவியீர்ப்பு ஏறக்குறைய பூச்சியம். மேலே செல்லும் வேளையில் சேய் கலத்தின் அதிகூடிய வேகம் சுமார் 4,000 km/h ஆக இருந்துள்ளது.
உல்லாச பயணிகள் சிறிது நேரம் seat belt ஐ கழற்றி கலத்துள் மிதக்கவும் விடப்பட்டனர். இந்த 6 பயணிகளுடன் தற்போது மொத்தம் 586 பேர் இவ்வளவு உயரத்துக்கு பயணித்து உள்ளனர். பொதுவாக விண்வெளி வீரர் மட்டுமே இந்த உயரத்துக்கு சென்றாலும், 7 செல்வந்தர் பெரும் பணம் வழங்கி International Space Station க்கு சென்று உள்ளனர்.
Amazon நிறுவனத்தை ஆரம்பித்த Jeff Bezos இன்னோர் உல்லாச பயண கலமான Blue Origin ஐ வேகமாக தயாரிக்க முயன்றாலும், அது பெரும் தோல்விகளை சந்தித்து உள்ளது. அது தாய் கலம் இல்லது, நிலத்தில் இருந்தே ஏவப்படும் முறைமையை கொண்டது. அது இந்த மாதம் 20ம் திகதி விண்ணுக்கு செல்லலாம். இவர் விண்வெளி பயணத்துக்கான ஒரு ஆசனத்தை $28 மில்லியனுக்கு ஏலம் மூலம் விற்பனை செய்து இருந்தார்.
Tesla நிறுவனத்தின் Elon Musk கும் Space X என்ற உல்லாச பயணத்துக்கான விண்வெளி கலம் ஒன்றை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.