கொழும்பை அண்டிய கடலில் அமெரிக்காவின் New Fortress Energy என்ற எரிவாயு நிறுவனம் liquefied natural gas (LNG) இறக்கும், சேமிக்கும் மற்றும் அடைக்கும் துறையை அமைக்கவுள்ளது. இதற்கான உடன்படிக்கையை New Fortress Energy இலங்கை அரசுடன் செய்து கொண்டுள்ளது.
இந்த புதிய ஆழ்கடல் எரிவாயு துறைமுகம் அமைக்கப்பட்டபின் எரிவாயு கப்பல்கள் கரைக்கு வராது, கடலில் நிலைகொண்டபடியே எரிவாயுவை இறக்க முடியும்.
குறிப்பாக கெரவலபிட்டிய (Kerawalapitiya) மின் உற்பத்தி நிலையத்துக்கு இந்த புதிய எரிவாயு துறை நேரடியாக எரிவாயுவை வழங்கும். தற்போது கெரவலப்பிட்டிய 300 MW மின்னை உற்பத்தி செய்கிறது. 2025ம் ஆண்டு அளவில் இதன் உற்பத்தியை 1,000 MW ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
கெரவலபிட்டிய மின் உற்பத்தி நிறுவனத்தில் இலங்கை அரசு கொண்டுள்ள 40% உரிமையையும் New Fortress Energy கொள்வனவு செய்ய பேச்சுவார்த்தை செய்கிறது.
இந்த துறை அடுத்த ஆண்டு நடுப்பகுதியின் பின் சேவைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.