அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய பின் தமது பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை என்று கருதும் சுமார் 1,600 ஆப்கானிஸ்தான் படையினர் ரெஜிகிஸ்தான் (Tajikistan) என்ற வடகிழக்கு எல்லையோர நாட்டுக்கு தப்பி ஓடியுள்ளனர்.
உள்ளூர் நேரப்படி திங்கள் காலையும் சிலர் தமது நாட்டுக்கு வந்துள்ளதாக Tajikistan National Security Committee கூறியுள்ளது. வேறு சிலர் பாகிஸ்தான், உஸ்பேக்கிஸ்தான் (Uzbekistan) ஆகிய எல்லையோர நாடுகளுக்கு ஓடி உள்ளனர்.
கடந்த 20 ஆண்டுகளாக தலபானுடன் போராடி, முழுமையான வெற்றி பெற முடியதாக நிலையில் அமெரிக்கா திடீரென ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி இருந்தது. உடனே பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற NATO நாடுகளும் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறின.
இந்நிலையில் தொடர்ந்தும் நாட்டின் பல பாகங்களை தலபான் அமெரிக்கா நிலைநாட்டிய அரசிடம் இருந்து பறித்து வருகிறது. Badakhshan மாகாணமும் இறுதியில் தலபான் கைக்கு மாறி உள்ளது. அங்கிருந்த அரச படைகள் தலைநகர் காபூலுக்கு நகர்ந்து உள்ளன.
ஆப்கானிஸ்தான் அரசின் பெரும் தலைவர்களின் குடும்பங்கள் ஏற்கனவே வெளி நாடுகளிலேயே வாழ்கின்றனர்.
நாட்டின் வடக்கே Mazar-e-Sharif என்ற இடத்தில் உள்ள ரஷ்ய பிரமுகரகத்து வேலைகளை தற்காலிகமாக நிறுவதாக ரஷ்யா கூறி உள்ளது. இப்பகுதியில் பாதுகாப்பு அற்ற நிலைமை தோன்றியதே காரணம் என்று கூறப்பட்டுள்ளது. இப்பகுதியில் இருந்த துருக்கி மற்றும் ஈரான் அலுவலகங்களும் கூடவே காபூலுக்கு நகர்ந்துள்ளன.