இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் ஓரு பாரிய இணைய தாக்குதல் (ransomware attack) இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை தளமாக கொண்ட Kaseya என்ற நிறுவனத்தின் VSA என்ற software ஒன்றில் உள்ள குறைபாட்டை அறிந்த தாக்குதல் குழு அந்த software ஐ பயன்படுத்தும் நிறுவனங்களை தாக்கி உள்ளது.
உலக அளவில் Kaseya நிறுவனத்தின் software களை சுமார் 40,000 சிறிய, பெரிய நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன.
இந்த குழுவே அண்மையில் JBS Foods என்ற இறைச்சி விற்பனை நிறுவனத்தை தாக்கி இருந்தது. அதாவது இன்றைய தாக்குதலையும் ரஷ்ய குழு ஒன்றே செய்துள்ளது சென்று அமெரிக்கா கூறுகிறது. REvil என்ற இந்த குழு உலகிலேயே மிக திறமை கொண்ட தாக்குதல் குழு என்று கூறப்படுகிறது. JBS Foods சுமார் $11 மில்லியன் வழங்கியே தனது இணையத்தை மீட்டு இருந்தது.
அண்மையில் ரஷ்ய சனாதிபதி பூட்டினை ஜெனீவாவில் சந்தித்த அமெரிக்க சனாதிபதி பைடென் அமெரிக்காவின் நீர் விநியோகம், மின் விநியோகம், எரிபொருள் விநியோகம் போன்ற 16 பிரதான கடமைப்புகளை தாக்கவேண்டாம் என்று பூட்டினிடம் கூறியிருந்தார்.
வரும் திங்கள் அமெரிக்காவின் சுதந்திர தின விடுமுறை ஆனபடியால் தாக்குதலை முறியடிக்கும் பணிகளும் தாமதம் அடையும்.
ரஷ்யாவும், மேற்கும் கடந்த சில தினங்களாக கருங்கடலிலும் முறுகல் நிலையில் உள்ளனர்.