மக்கள் கரோனா தடுப்பு மருந்துக்கு அவதிப்படும் வேளையில் சில சமூக விரோதிகள் பொய்யான தடுப்பு மருந்துகளை ஏற்றி மக்களை ஆபத்தில் தள்ளி, பெரும் பணமும் உழைக்கின்றனர். சில பொய் ஊசி ஏற்றுவோர் கைதும் செய்யப்பட்டு உள்ளனர்.
Debanjan Deb என்ற 28 வயது கொண்ட ஒருவர் தன்னை ஒரு அரச ஊழியர் என்று கூறி சுமார் 2,000 பேருக்கு பொய்யான தடுப்பு மருந்துகளை ஏற்றி உள்ளார். அதில் ஒருவர் பா. ஜ. அரசியல்வாதி. மும்பாயில் மேலும் 2,053 பேர் பொய்யான தடுப்பு மருந்து பெற்று உள்ளனர். Deb உட்பட 6 பேர் அங்கு கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இவர்கள் பெற்ற தடுப்பு மருந்து குப்பிகளில் Covishield மற்றும் Covaxin என்று எழுதப்பட்டு இருந்தாலும் அவை உண்மையான மருந்துகள் அல்ல என்று போலீசார் கூறுகின்றனர்.
Pramod Kumar என்ற Bank of Baroda முகாமையாளர் தடுப்பு மருந்துக்கு அவதிப்பட்டபோது Mahendra Pratap Singh என்ற நீண்ட கால வாடிக்கையாளர் 800 ரூபாய்க்கு தடுப்பு மருந்து வழங்க முன்வந்துள்ளார். உடனே முகாமையாளர் வங்கியின் ஊழியர் அனைவருக்கும் தடுப்பு மருந்து வழங்க ஒழுங்குகள் செய்தார். முதலாவது ஊசி Shivam Hospital என்ற வைத்தியசாலையில் வழங்கப்பட்டது. இரண்டாவது ஊசி ஏற்றல் திடீரென வங்கி கிளைக்கு மாற்றப்பட்டது. மே மாதம் 25ம் திகதி வழங்கப்பட்ட இரண்டாம் மருந்து குப்பியில் Co-WIN என்றே எழுதப்பட்டு இருந்ததாம்.
ஊழியர் எவரும் அரசின் தடுப்பூசி பெற்றமைக்கான சான்றிதழ் வழங்கப்படாத நிலையில், தாம் பெற்ற இரண்டாம் பொய் ஊசி என்பதை அறிந்து உள்ளனர் (பெற்றது saline water). அத்துடன் 39 வயதுடைய Singh கைது செய்யப்பட்டதையும் அவர்கள் பின்னர் அறிந்து உள்ளனர். Singh குழு மட்டும் 26 லட்சம் ரூபாய்கள் பொய் ஊசிகள் மூலம் பெற்று இருந்ததாக போலீசார் கூறுகின்றனர்.
Shivam Hospital மொத்தம் 23,350 குப்பிகளை, குப்பி ஒன்றுக்கு 150 ரூபாய் என்ற விலைப்படி, மத்திய அரசிடம் இருந்து பெற்று இருந்தது.
United States Trade Representative (USTR) 2019ம் ஆண்டு தெரிவித்த கூற்றின்படி இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மருந்துகளில் 20% பொய்யானவை.