பசுபிக் பக்கமான கனடிய மற்றும் அமெரிக்க பகுதிகளில் தற்போது என்றுமில்லாதவாறு கடும் வெப்பம் வீசுகிறது. வான்கூவர் மாநகரை கொண்ட கனடாவின் British Columbia மாநிலத்து Lytton என்ற நகரில் இன்று 46.1 C வெப்பநிலை பதியப்பட்டு உள்ளது. அங்குள்ள Fraser Valley பகுதியில் 40 C பதியப்பட்டு உள்ளது.
கனடாவின் British Columbia, Alberta, Saskatchewan ஆகிய மேற்கு மாநிலங்களில் அடுத்து வரும் சில தினங்களில் வெப்பம் மேலும் உக்கிரம் அடையும் என்று வானிலை அதிகாரிகள் கூறுகின்றனர்.
அமெரிக்காவின் Washington, Oregon, California ஆகிய பசுபிக் கடலோர மாநிலங்களும் மேற்படி வெப்ப வீச்சு தாக்கத்துள் அடங்கி உள்ளன. Oregon மாநிலத்து Portland நகரில் இன்று 42.2 C வெப்பநிலை பதியப்பட்டு உள்ளது.
Washington மாநிலத்தில் உள்ள Seattle நகரில் 39.4 C வெப்பநிலை பதியப்பட்டு உள்ளது. இங்கு எதிர்பார்க்கப்படும் தற்கால சாதராண வெப்பநிலை 23 C மட்டுமே.
பொதுவாக குளிர்மையான வெப்பநிலைகளை கொண்ட இப்பகுதிகளில் உள்ள பல வீடுகளில் A/C வசதிகள் இல்லை, heater வசதிகள் மட்டுமே உள்ளன.