இந்தியாவின் பெரும் செல்வந்தர்களின் ஒருவரான அடானி (Gautam Adani) கடந்த ஒரு கிழமைக்குள் சுமார் $13.2 பில்லியன் வெகுமதியை இழந்துள்ளார். தற்போது அவரின் மொத்த சொத்துக்கள் சுமார் $63.5 பில்லியன் என்று கூறப்படுகிறது. இவரின் வெளிநாட்டு முதலீடுகளில் குழப்பங்கள் இருக்கலாம் என்று ஏனைய முதலீட்டாளர் கருதி அவருடனான பங்குகளை கைவிட்டதே சரிவுக்கு காரணம்.
இந்த மாத ஆரம்பத்தில் அடானியின் மொத்த சொத்துக்கள் சுமார் $80 பில்லியன் ஆக இருந்தது.
Mauritius நாட்டில் பதிவு செய்யப்பட்ட இவரின் Albula Investment, Cresta Fund, APMS Investment Fund ஆகிய மூன்று முதலீட்டு நிறுவனங்களின் கணக்குகள் சந்தேகங்கள் முடக்கப்பட்டன என்று செய்தி வெளிவந்ததே அடானியின் வெகுமதி சரிவுக்கு பிரதான காரணம்.
அடானி தரப்பு தாம் தவறுகள் எதையும் செய்யவில்லை என்று கூறினாலும், பீதி கொண்ட ஏனைய முதலீட்டாளர் இந்த பங்குகளை கைவிட்ட ஆரம்பித்தனர்.
Adani Green Energy Ltd. பங்குச்சந்தை பங்கு கடந்த கிழமைக்குள் 7.7% பெறுமதியை இழந்துள்ளது. Adani Ports & Special Economic Zone Ltd. பங்கு 23% பெறுமதியை இழந்துள்ளது. Adani Power, Adani Total Gas, Adani Transmission ஆகியன சுமார் 18% வெகுமதியை இழந்துள்ளன.
இவரின் நிறுவனமே கொழும்பில் சீனாவின் WCT க்கு போட்டியாக கிழக்கு துறைமுகத்தை (ECT) கட்டுமானம் செய்யவுள்ளது.
வரைபடம்: Bloomberg