சீனா தான் அமைக்கவுள்ள China Space Station (CSS) என்ற விண்வெளி ஆய்வு கூடத்தில் பணியாற்ற 3 விண்வெளி வீரரை இன்று வியாழன் ஏவி உள்ளது. சீனாவின் விண்வெளி ஆய்வுகூட கட்டுமானம் மொத்தம் 11 ஏவல்களை கொண்டிருக்கும். சீனாவின் கோபி பாலைவனத்தில் (Gobi Desert) இருந்து இன்று ஏவப்பட்டது 3 வது ஏவலாகும்.
இன்றைய ஏவலில் 56 வயதுடைய Nie Haisheng, 54 வயதுடைய Liu Boming, 45 வயதுடைய Tang Hongbo ஆகியோரே பயணிக்கின்றனர். முதலில் 14 பேர் தெரிவு செய்யப்பட்டு, அதில் இருந்தே மேற்படி மூவரும் தெரிவு செய்யப்பட்டனர். இவர்கள் மூவரும் 3 மாதங்கள் சீனாவின் விண் ஆய்வு கூடத்தில் தங்கி இருந்து கட்டுமானத்தை மேற்கொள்வர்.
அனைத்து ஏவல்களும் அடுத்த ஆண்டு இறுதிக்கு முன் முடிவடைந்து அந்த ஆய்வுகூடம் செயற்பட ஆரம்பிக்கும். CSS சேவைக்கு வந்தபின் இது 6 பேரை கொள்ளக்கூடியதாக இருக்கும்.
சீனாவின் T வடிவிலான இந்த வின் ஆய்வுகூடம் இறுதியில் 100 தொன் எடை கொண்டதாக இருக்கும். ஆனாலும் தேவைப்படின் இதை பெருபிக்க தேவையான வசதிகளை கொண்டிருக்கும். இது 390 km உயரத்தில் பூமியை சுற்றிவரும்.
சீனாவின் இந்த ஆய்வுகூடத்தில் பரிசோதனைகள் செய்ய சில தெரிவு செய்யப்பட்ட வெளிநாடுகளின் ஆய்வாளருக்கும் அழைப்பு விடப்பட்டு உள்ளது. மொத்தம் 17 நாடுகள் இணைத்து தயாரித்த 9 பரிசோதனைகள் இம்முறை பரீட்சிக்கப்படும்.
1998ம் ஆண்டு அமெரிக்கா, கனடா, ரஷ்யா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் எல்லாம் இணைந்து அனுப்பிய International Space Station (ISS) என்ற சர்வதேச வின் ஆய்வுகூடம் 450 தொன் எடை கொண்டது. இது தற்போதும் இயங்கி வருகிறது. ரஷ்யாவை இந்த திட்டத்தில் இணைத்த அமெரிக்கா சீனாவை இணைக்க மறுத்து இருந்தது. சீனா தனது சொந்த விண்வெளி ஆய்வுகூடத்தை உருவாக்க இதுவும் ஒரு காரணம்.