Julie Jiyoon Chung என்பவர் இலங்கைக்கான புதிய தூதுவராக நியமனம் செய்யப்படவுள்ளார். இவர் இலங்கை, மாலைதீவு ஆகிய இரண்டு நாடுகளுக்கும் தூதுவராவார். இந்த அறிவிப்பை வெள்ளைமாளிகை இன்று செவ்வாய் வெளியிட்டு உள்ளது.
தென்கொரியாவில் பிறந்த இவர் தனது 5 வயதில் பெற்றாருடன் அமெரிக்கா சென்றிருந்தார். இவர் ஆங்கிலம், சீன, கொரியன், ஜப்பான், வியட்நாம், தாய்லாந்து, கம்போடிய Khmer, ஸ்பானிஸ் மொழிகளை கற்றவர்.
இவர் ஜனவரி மாதம் முதல் அமெரிக்காவின் Bureau of Western Hemisphere Affairs திணைக்களத்தின் Acting Assistant Secretary ஆக பணியாற்றுகிறார். இவர் 1996ம் ஆண்டு முதல் அமெரிக்க அரசில் பணிபுரிய ஆரம்பித்து இருந்தார்.
சனாதிபதி பைடெனின் இந்த நியமனம் அமெரிக்க காங்கிரஸினால் ஏற்றுக்கொள்ளப்படல் அவசியம். அதன் பின்னரே நியமனம் உறுதியாகும்.