Planet Labs Inc. என்ற அமைப்பால் பெற்றுக்கொள்ளப்பட்ட செய்மதி படம் ஒன்று கொழும்பு கடலுள் எரிந்து தாழும் X-Press Pearl கப்பலில் இருந்து எண்ணெய் கசிவதை காட்டுகிறது.
ஆனால் கரையோர வள அமைச்சர் Nalaka Godahewa செய்மதி படம் could be misleading என்றுள்ளார். அத்துடன் இலங்கை மற்றும் இந்திய கடற்படையினர் கவலைப்படும் அளவுக்கு எண்ணெய் கசியவில்லை என்று கூறியதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இந்த கப்பலில் 25 தொன் nitric அமிலம் இருந்துள்ளது. அத்துடன் கப்பலின் பாவனைக்காகவும் பெருமளவு எண்ணெய் இருந்துள்ளது.
இக்கப்பல் கொழும்புக்கும், நீர்கொழும்புக்கும் இடைப்பட்ட கடலில், சுமார் 18 km (9.5 கடல் மைல்) தூரத்தில் தாழ்கிறது. இப்பகுதியில் ஆழம் சுமார் 21 மீட்டர் மட்டுமே. ஆழ்கடலுக்கு இதை இழுத்து செல்லும் முயற்சி பயனளிக்கவில்லை.
இப்பகுதியின் நீரோட்ட திசை காரணமாக இக்கப்பலில் இருந்து வெளியேறும் ஆபத்தான பொருட்கள் தென்னிலங்கையை நோக்கியே நகரும்.
இந்த ஆண்டு பெப்ருவரி மாதம் சேவைக்கு வந்திருந்த இந்த புதிய கப்பல் 186 மீட்டர் நீளம் கொண்டது.