நகை வர்த்தகர்கள் போல் நடித்து Nirav Modi என்பவரும், Mehul Choksi என்ற அவரின் மாமனாரும் $2 பில்லியன் பணத்தை இந்தியாவின் Punjab National Bank என்ற வங்கியில் இருந்து திருட்டுத்தனமாக பெற்று தப்பி ஓடியிருந்தனர். அந்த இருவருள் மாமனார் Choksi புதன்கிழமை டொமினிக்காவில் (Dominica) வைத்து கைது செய்யப்பட்டு உள்ளார்.
2018ம் ஆண்டு ஜனவரி மாதம், இவர்களின் திருட்டு அம்பலத்துக்கு வர சில தினங்கள் இருக்கையில், இருவரும் இந்தியாவை விட்டு தப்பியோடி இருந்தனர். Modi பிரித்தானியா சென்று அகதி நிலைக்கு விண்ணப்பித்து உள்ளார். அவரை இந்தியாவுக்கு நாடுகடத்த இந்திய அரசு தற்போதும் முனைந்து வருகிறது.
மாமனார் Choksi மத்திய அமெரிக்காவுக்கு அருகில் உள்ள Antigua and Barbuda என்ற Caribbean நாட்டில் குடியுரிமை பெற்றுள்ளார். அந்நாடு பெரும் பணத்துடன் வருவோர்க்கு வழங்கும் golden passport மூலமே மாமனார் குடியுரிமை பெற்று இருந்தார்.
இவர் கியூபாவுக்கு செல்லும் நோக்கில் படகு ஒன்றில் டொமினிக்கா சென்று இருக்கையிலேயே கைது செய்யப்பட்டு உள்ளார்.
இந்தியாவின் Kingfisher Airlines உரிமையாளரும் 2016ம் ஆண்டு முதல் பிரித்தானியாவில் மறைந்து வாழ்கிறார். இவர் இந்தியாவில் $1.3 பில்லியன் திருடியதாக கூறப்படுகிறது.