தற்போதைய அமெரிக்க சனாதிபதி பைடெனுக்கும், முன்னாள் சனாதிபதி ரம்புக்கும் இடையில் ஏது வித்தியாசம் என்று பைடெனின் Democratic கட்சி உறுப்பினர்கள் சிலர் தற்போது வினாவுகின்றனர். இஸ்ரேலுக்கும், பலஸ்தீனர்களுக்கும் இடையில் நிகழும் மோதல்களை கண்டும் காணாமல் இருக்கும் பைடேனின் போக்கே இங்கு கண்டிக்கப்படுகிறது.
பல்லாண்டு காலமாக மேற்கு நாடுகளின் அரசியல்வாதிகள் இஸ்ரேல்-பலஸ்தீன் மோதல்கள் இடம்பெறும்போது இஸ்ரேலுக்கு தன்னை பாதுகாக்கும் உரிமை உண்டு என்று மட்டும் கூறுவார்கள். ஆனால் பலஸ்தீனர்களுக்கு தம்மை பாதுகாக்கும் உரிமை உண்டு என்று அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மன் போன்ற நாடுகளின் அரசில்வாதிகள் கூறுவது இல்லை.
நியூ யார்க் மாநில Democratic கட்சி உறுப்பினரான Alexandria Ocasio-Cortez, Michigan மாநில Democratic உறுப்பினர் Rashida Tlaib (ஒரு பலஸ்தீனர்), Maryland மாநில Democratic உறுப்பினர் Chris Van Hollen ஆகியோர் பைடெனின் தொடரும் மேற்படி துரோக அணுகுமுறையை சாடி உள்ளனர்.
Vermont மாநில உறுப்பினரான Bernie Sanders (ஒரு யூதர்) இஸ்ரேலின் நடவடிக்கைகளை கண்டித்து New York Times பத்திரிகையில் எழுதிய தனது கட்டுரை ஒன்றில் பைடெனின் பாராமுகத்தை கண்டித்து உள்ளார்.
இரண்டு விசயங்களை தவிர மற்றைய அனைத்து வெளியுறவு கொள்கைகளிலும் பைடென், முன்னாள் ரம்ப் வழியிலேயே பயணிக்கிறார். ரம்பி ஐரோப்பியரை பகைத்தார், பைடென் ஐரோப்பிய நாடுகளுடன் உறவை புதுப்பித்தார். ரம்ப் பூட்டனுடன் இசைந்தார், பைடென் பூட்டனுடன் முரண்படுகிறார். ஏனைய விசயங்களில் பைடெனும், ரம்பும் ஏறக்குறைய ஒன்றே.
ரம்ப் தரக்குறைவான பேச்சுக்கள் மூலம் செய்வதையே பைடென் பண்பான பேச்சுக்கள் மூலம் செய்கிறார்.