அரசுகள் தமது பெரும் திட்டங்களுக்கு bond கடன் மூலம் முதலீடு பெறும். அந்த bond கடனுக்கு ஆண்டுதோறும் அறிவிக்கப்பட்ட வட்டியும், bond முதிர்வடையும் காலத்தில் முதலையும் அரசு மீள செலுத்தும்.
கடந்த சில காலங்களாக இலங்கை முதிர்வடையும் bond முதலீடுகளையும், வட்டிகளையும் மீள செலுத்த பணம் இன்றி அவதிப்பட்டது. இந்நிலைக்கு அரசின் தவறான திட்டங்கள், கரோனா தோற்றுவித்த பாதிப்பு போன்ற பல காரணங்கள் ஆகிய. அதனால் இலங்கை அரசின் bond ஆசியாவிலேயே விரும்பத்தகாத bond ஆகியது.
அந்நிலையிலேயே சீனா $1.5 பில்லியன் (currency swap) கடன் வழங்கியது. உடனேயே இலங்கை bond மீதான நாட்டம் மீண்டும் அதிகரித்து, இலங்கை bond தற்போது ஆசியாவின் மிக விருப்பத்துக்குரிய bond ஆக மாறியுள்ளது.
Bloomberg Barclays சுட்டியின்படி இந்த காலாண்டில் இலங்கை bond 15% உழைப்பை வழங்கி உள்ளது. 2021ம் ஆண்டின் இன்று வரையான உழைப்பு 25% ஆக உள்ளது. கடந்த ஆண்டில் மேற்படி சுட்டி 31% இழப்பை கொண்டிருந்தது.
இலங்கையின் bond மட்டுமன்றி, கூடவே இலங்கை ரூபா தளம்புவதும் குறைந்துள்ளது.
ஆனால் இலங்கை எப்போதும் புதிய கடன் பெற்று பழைய கடனையும் அதன் வட்டியையும் செலுத்த முடியாது. நாடு போதிய வருமானத்தை உழைக்க வேண்டும்.
வரும் 2 மாதங்களில் இலங்கை அரசு சுமார் $1 பில்லியன் bond கடனை அடைக்க வேண்டும். 2022ம் ஆண்டு ஜூலை அளவில் $மேலும் $2.5 பில்லியன் bond கடனை அடைக்க வேண்டும்.