உலக வங்கி (World Bank) மேலதிகமாக வழங்கும் $80.5 மில்லியன் பணத்தில் இலங்கை மேலும் கரோனா தடுப்பு ஊசிகளை கொள்வனவு செய்யவுள்ளது.
உலக வங்கியின் COVID-19 Emergency Response and Health System Preparedness என்ற திட்டத்தின் கீழான இந்த பணத்தை பயன்படுத்தி உலக வங்கி அங்கீகரித்த தடுப்பு மருந்துகளை மருகே இலங்கை கொள்வனவு செய்ய முடியும். இந்த் திட்டத்தில் இதுவரை மொத்தம் $298.07 மில்லியன் வழங்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே 925,242 பேருக்கு இலங்கையில் முதலாவது AstraZeneca தடுப்பு ஊசி ஏற்றப்பட்டு உள்ளன. ஆனால் இந்தியா தடுப்பு ஊசி ஏற்றுமதியை கட்டுப்படுத்தியதால் இலங்கையில் தடுப்பு ஊசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இரண்டாம் AstraZeneca ஊசியை ஏற்றுவதற்கு மேலும் 350,000 குப்பிகள் தேவை.
அதேவேளை இலங்கை 600,000 சீன Sinopharm மருந்துகளையும், 15,000 ரஷ்ய Sputnik மருந்துகளையும் பெற்று உள்ளது.