சீனாவின் Long March 5b என்ற வெற்று கலம் ஞாயிறு அதிகாலை மாலத்தீவுக்கு அண்மையில் கடலுள் வீழ்ந்ததாக சீனா கூறியுள்ளது.
அந்த அறிக்கையில் மேற்படி வெற்று கலம் UTC நேரப்படி காலை 2:24 மணிக்கு 72.47 பாகை நெட்டாங்கும், 2.65 பாகை அகலாங்கும் சந்திக்கும் இடத்தில் வீழ்ந்ததாக கூறப்பட்டுள்ளது. (கொழும்பு 79.861244 நெட்டாங்கிலும், 6.927079 அகலாங்கிலும் உள்ளது)
இந்த கணை ஏவப்பட்டபோது மொத்த நீளம் 53.7 மீட்டர் கொண்டது. விழுந்த வெற்று பாகம் சுமார் 33 மீட்டர் நீளம் கொண்டது. ஏவப்பட்ட சீனாவின் விண் ஆய்வுகூடம் உரிய பாதையில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டு உள்ளது.
இன்று விழுந்தது ஒரு பெரிய விண்கல பாகம் என்றாலும், 2003ம் ஆண்டு விபத்துக்கு உள்ளான Columbia space shuttle, 1991ம் ஆண்டு விழுந்த சோவியத்தின் Salyut 7 ஆய்வுகூடம், 1979ம் ஆண்டு விழுந்த நாசாவின் Skylab ஆகிய மூன்றும் இன்றையதிலும் பெரியன.