யுக்கிரேனில் மோதும் மேற்கும் ரஷ்யாவும்

Ukraine

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கு முதல்படியாக யுக்கிறேனுடன் வர்த்தக உடன்படிக்கை ஒன்றில் ஒப்பமிட ஐரோப்பிய ஒன்றியம் முனைந்தது. ஆனால் ஆட்சியில் இருக்கும் ரஷ்யா சார்பு அரசு அந்த ஒப்பமிடலை இழுத்தடித்து வந்தது. அதனை தொடர்ந்து யுக்கிரேனின் மேற்கு சார்ந்த எதிர்கட்சி மேற்கின் ஆதரவுடன் போராட்டங்களில் இறங்கியுள்ளது. இதை கலைக்க யுக்ரேன் அரசு முனைந்து வருகிறது.

எகிப்தில் ஜனாயக முறைப்படி ஆட்சிக்கு வந்த அரசை கவிழ்த்த இராணுவ புரட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை ஆதரிக்காத மேற்கு யுக்கிறேனில் மட்டும் ஆர்ப்பாட்டகாரர்களை பாராட்டுகிறது. அமெரிக்காவின் Victoria Nuland மற்றும் EUவின் Catherine Ashton போன்றோர் ஆர்ப்பட்டகாரரை நேரில் சென்று பாராட்டியுள்ளனர்.

அண்மையில் முன்னரே திட்டமிடப்பட்டபடி யுக்கிரேனின் (Ukraine) தலைநகர் கிஏவ் (Kiev) நகரில் நடைபெற இருந்த Organization for Security and Cooperation கூட்டத்தில் கலந்து கொள்ளாது, அதற்கு பதிலாக மோல்டோவாவுக்கு (Moldova) சென்றிருந்தார் அமெரிக்காவின் John  Kerry. ஐரோப்பிய சமூகத்துடனான வர்த்தக உடன்படிக்கையில் ஒப்பமிடாது ரஷ்யாவுடன் நெருக்கமான உறவுகளை பேணுவதே அமெரிக்காவின் இந்த விசனத்துக்கு காரணம்.

மோல்டோவ மறுபுறத்தில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக உடன்படிக்கைகளில் ஒப்பந்தமிட்டுள்ளது. அதன் பின் ரஷ்யா மோல்டோவாவில் இருந்து wine இருக்குமதி செய்வதை நிறுத்தியுள்ளது. Wine உற்பத்தி மொடோவாவின் முதலாவது உற்பத்தி.

தற்போது அமெரிக்கா யுக்கிரேனுக்கு எதிராக பொருளாதார தடைகளையும் கொண்டுவரப்போவதாகவும் மிரட்டுகிறது.

மற்றைய பல நாடுகளைப்போலவே கடனில் மூழ்கவிவிருக்கும் யுக்கிரேன் ரஷ்யாவிடமும் மேற்க்கிடமும் எதிபார்ப்பது கடன் உதவியையே. மேற்கு 20 பில்லியன் யூரோவை வழங்கினால் தாம் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு சார்பாக ஒப்பந்தம் இடுவதாக யுக்ரேன் கூறியுள்ளது.