இஸ்ரேலில் கடந்த 2 ஆண்டுகளில் நடைபெற்ற 4 தேர்தல்கள் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை ஆசனங்களை வழங்கி திடமான ஆட்சியை அமைக்கவில்லை. நாலாவது தேர்தல் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இம்முறையும் முன்னணியில் உள்ள பிரதமர் Netanyahu கட்சியுடனான கூட்டணி மொத்தம் 120 ஆசனங்களில் 52 ஆசனங்களை மட்டுமே வென்றுள்ளது.
ஒரு கட்சியும் 60 க்கும் மேலான ஆசனங்களை கொண்டிராத நிலையில், கூட்டு ஆட்சி ஒன்றே அமையும். கூட்டு ஆட்சி அங்கு நீண்ட காலம் நிலைப்பது இல்லை.
அதேவேளை அங்குள்ள இஸ்லாமிய கட்சி இம்முறை 4 ஆசனங்களை வென்றுள்ளது. இந்த 4 ஆசனங்களுக்கு தற்போது மிகையான மதிப்பு தோன்றியுள்ளது. இந்த இஸ்லாமிய கட்சி பலஸ்தீனியர் மீது காழ்ப்பு கொண்ட Netanyahu கட்சிக்கு ஆதரவு வழங்கும் என்று நம்ப முடியாது. ஆனாலும் அந்த கட்சி எவருடனும் பேச்சுக்கு தயார் என்றுள்ளது.
அங்கு முன்னணியில் உள்ள Likud கட்சி 24.2% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. இரண்டாம் நிலையில் உள்ள Yesh Atid கட்சி 13.9% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.
அங்கு விரைவில் 5ம் தேர்தலும் விரைவில் நிகழலாம்.