இந்தியாவின் அயோத்தியில் கட்டப்படவுள்ள இராமர் கோவிலுக்கு இலங்கையின் சீதா எலிய (Seetha Eliya) கல் ஒன்று இலங்கையால் வழங்கப்பட்டு உள்ளது. இந்த கல்லை இந்தியாவுக்கான தூதுவராக பணி ஏற்கவுள்ள Milinda Moragoda எடுத்து செல்லக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
இராவணன் சீதையை கடத்தி இலங்கையின் சீதா எலிய என்ற இடத்திலேயே சிறை வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இங்கு சீதைக்கு தற்போது ஒரு ஆலயம் உண்டு.
இந்த கல் மயூராபதி அம்மன் ஆலயத்தில் (Mayurapathi Amman) வைத்து கையளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அயோத்தியில் இராமர் கோவில் கட்டுமான வேலைகள் வரும் மூன்று ஆண்டுகளுள் நிறைவுபெறும் என்று கூறப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோதி கோவிலுக்கான அடிக்கல்லை பதித்து இருந்தார்.