அமெரிக்காவின் Georgia மாநிலத்து பெரிய நகரான அட்லாண்டாவில் (Atlanta) உள்ள 3 சீனா massage நிலையங்களில் இடம்பெற்ற துப்பாக்கி தாக்குதல்களுக்கு 8 பேர் பலியாகி உள்ளனர். அதில் குறைந்தது 6 பேர் சீன அமெரிக்க பெண்கள். மேலும் பலர் காயமடைந்தும் உள்ளனர். Robert Aaron Long என்ற 21 வயது வெள்ளை இனத்தவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
Gold Massage Spa, Aromatherapy Spa, Young’s Asian Massage ஆகிய மூன்று நிலையங்களே தாக்குதலுக்கு உள்ளாகின. சந்தேகநபர் 240 km தொலைவில் உள்ள Crisp County என்ற இடத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார். Gold Massage Spa முதலில் கொள்ளை இடம்பெறுவதாக நினைத்து அக்கரணத்துக்காகவே போலீசாரை அழைத்து உள்ளது. பின்னரே இது கொலை நோக்கம் கொண்ட தாக்குதல் என்று தெரியவந்தது.
Georgia போன்ற தென் மாநிலங்கள் கடுமையான Republican கட்சி ஆதரவு கொண்ட மாநிலங்கள். இங்கு ரம்ப் பலத்த ஆதரவை கொண்டிருந்தார். ரம்ப் தனது உரைகளில் கரோனா சீனாவின் வைரஸ் என்று (China virus) கூறி வந்துள்ளார்.
அமெரிக்க சீனர்கள் மீது தற்காலங்களில் தாக்குதல் அதிகமாகி வருகிறது. 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்த ஆண்டு பெப்ருவாரி மாதம் வரை 3,795 தாக்குதல் சம்பவங்கள் போலீசாரிடம் பதியப்பட்டு உள்ளன. சிலவேளைகளில் சீனர்கள் போன்று தெரிவதால் தாய்லாந்து, பிலிப்பீன், வியட்நாம் போன்ற நாட்டவரும் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளனர்.