தற்போதைய பிரதமர் மோதி தலைமையிலான பா.ஜ. கட்சி ஆட்சியை பாகிஸ்தானின் சவாதிகார ஆட்சியுடன் ஒப்பிடுகிறது சுவீடனை தளமாக கொண்ட V-Dem (Varieties of Democracy) என்ற அமைப்பு. அதனால் இதுவரை “world’s largest democracy” என்று கணித்த இந்தியாவை மேற்படி அமைப்பு தற்போது “electoral autocracy” என்று கணிக்கிறது.
V-Dem தனது 0 முதல் 1 வரையான கணிப்பு சுட்டியில், இந்தியா 2013ம் ஆண்டில் 0.57 புள்ளியை கொண்டு இருந்ததாகவும், ஆனால் 2020ம் ஆண்டு 0.34 புள்ளியை மட்டுமே கொண்டு உள்ளதாகவும் கூறியுள்ளது. 2014ம் ஆண்டில் இந்துவாத மோதி அரசு ஆட்சிக்கு வந்திருந்தது.
ஏற்கனவே அமெரிக்காவை தளமாக கொண்ட Freedom House என்ற அமைப்பும் இந்தியாவை “partly free” என்று தனது Freedom in the World அறிக்கையில் கணிப்பிட்டு தரம் இறக்கி உள்ளது.
குறிப்பாக இந்திய அரசும், அதன் ஆதரவாளர்களும் செய்தி சேவைகள் மீது கொண்டுள்ள கடும் போக்கே காரணமாக கூறப்படுகிறது. மோதி அரசின் குறைபாடுகளை செய்தி நிறுவனங்கள் ஆய்வது, விமர்சிப்பது எல்லாம் தற்போது அங்கு ஆபத்தான காரியங்களாக உள்ளன.
அத்துடன் 10 ஆண்டுகளுக்கு முன் 41 நாடுகளில் சுதந்திர சனநாயகம் இருந்ததாகவும், அனால் தற்போது 32 நாடுகளில் மட்டுமே சுதந்திர சனநாயகம் உள்ளதாகவும் V-Dem கூறுகிறது.
குறிப்பிடக்கூடிய சில நாடுகளின் சுட்டிகள்:
டென்மார்க்: சுட்டி 0.88, 1ம் இடம்
சுவீடன்: சுட்டி 0.87, 2ம் இடம்
நோர்வே: சுட்டி 0.86, 3ம் இடம்
ஜெர்மனி: சுட்டி 0.83, 8ம் இடம்
தென்கொரியா: சுட்டி 0.79, 17ம் இடம்
கனடா: சுட்டி 0.74, 28ம் இடம்
அமெரிக்கா: சுட்டி 0.73, 31ம் இடம்
இலங்கை: சுட்டி 0.38, 88ம் இடம்
இந்தியா: சுட்டி 0.34, 87ம் இடம்
பாகிஸ்தான்: சுட்டி 0.25, 116ம் இடம்
பங்களாதேசம்: சுட்டி 0.10, 154ம் இடம்
சீனா: சுட்டி 0.04, 174ம் இடம்
எரித்திரியா: சுட்டி 0.01, 179ம் இடம்
V-Dem தாம் 202 நாடுகளுக்கான 1789ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரையான காலத்து தரவுகளை கொண்டுள்ளதாக கூறுகிறது.