2020ம் ஆண்டில் கரோனா உலக வர்த்தகத்தை பாதித்து இருந்தாலும், சீனாவில் Billionaires உருவாகுவது குறையவில்லை. 2020ம் ஆண்டில் அங்கு மொத்தம் 1,058 Billionaires இருந்துள்ளனர். ஆனால் அதே காலத்தில் அமெரிக்காவில் 696 Billionaires மட்டுமே இருந்துள்ளனர். உலகில் முதலாவதாக ஒரு நாடு ஆயிரத்துக்கும் அதிகமான Billionaires வகுப்பை கொண்டது சீனாவிலேயே.
கடந்த ஆண்டில் மட்டும் உலகில் 610 புதிய Billionaires உருவாகினர். அதிலும் 318 பேர் சீனர், 95 பேர் அமெரிக்கர் என்று கூறுகிறது Hurun Report.
பெரும்பாலான Billionaires பங்குச்சந்தை பங்குகளை கொண்டிருப்பதன் மூலமே Billionaires ஆகின்றனர்.அவர்களிடம் பணம், சொத்து ஆகியன குறைவாகவே இருக்கும். அவர்களின் பங்கு சொத்தும் நாளுக்குநாள் பல பில்லியன் பெறுமதியால் கூடிக்குறையும். வர்கள் கொண்டுள்ள பங்குகளின் விலை அதிக அளவில் கூடிகுறைவதே காரணம்.
உலக அளவில் 3,228 Billionaires உள்ளதாக கணிக்கப்படுகிறது. இவர்கள் 68 நாடுகளில் வாழ்கின்றனர். இவர்களின் பங்கு மூலமான சொத்துக்கள் சுமார் 2,400 நிறுவனங்களில் உள்ளன.
உலக அளவில் அதிக Billionaires உள்ள முதல் 10 நகரங்களில் 6 நகரங்கள் சீனாவில் உள்ளன. பெய்ஜிங்கில் மட்டும் 145 Billionaires உள்ளனர். இரண்டாவதாக ஷாங்காயில் 113 Billionaires உள்ளனர். மூன்றாம் நிலையில் உள்ள நியூ யார்க் நகரில் 112 Billionaires உள்ளனர்.
கடந்த ஆண்டு Tesla நிறுவன பங்கின் பெறுமதி 622% ஆல் அதிகரிக்க, Elon Musk $197 பில்லியன் பெறுமதி கொண்டு உலகின் முதலாவது பணக்காரர் ஆக இருந்தார். அனால் Tesla பங்கு விலை தற்போது வீழ்ச்சி அடைய, சுமார் $189 பில்லியன் கொண்ட Amazon நிறுவதின் Jeff Bezos மீண்டும் முதலாவது பணக்காரர் ஆனார்.