சீனாவுக்கான இலங்கையின் அம்பாந்தோட்டைதுறைமுக குத்தகை தேவைப்பட்டால் 198 ஆண்டுகளுக்கு நீடிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. முதல் 99 ஆண்டு குத்தகையின் முடிவில் மேலும் ஒரு 99 ஆண்டுகளுக்கு குத்தகையை நீடிக்க குத்தகை இணக்கத்தில் இடம் உண்டு என்று கூறப்படுகிறது.
இந்த ‘தவறை’ முன்னைய அரசு செய்துள்ளது என்று கூறுகிறார் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன.
சீனாவிடம் இருந்து பெற்ற கடன் தொல்லையால் 2017ம் ஆண்டு செய்யப்பட்ட இந்த குத்தகை இணக்கத்தை மாற்ற முனைவதாக இலங்கை அரசின் உறுப்பினர்கள் கூறி வந்தாலும், குத்தகை இணக்கத்தை மாற்ற எந்தவொரு பேச்சுக்களும் இடம்பெறவில்லை என்று சீனா இன்று புதன்கிழமை கூறியுள்ளது.
சீனாவுடனான பேச்சுக்கள் சாதகமாக அமையாத நிலையிலேயே சீனாவின் கட்டுப்பாட்டுள் அடங்கும் நிலத்தில் இருந்து இலங்கை தனது கடற்படை தளத்தை வேறு இடத்துக்கு நகர்த்தியதாக கூறியுள்ளது.