சீனாவின் உதவியுடன் அமெரிக்கா ஈரான் விவகாரத்தில் ஒரு இணக்கத்தை காணும் அதே வேலையில் சீன கிழக்கு சீன கடலில் ஒரு வான் பாதுகாப்பு வலயத்தை உருவாக்கியுள்ளது (East China Sea Air Defense Identification Zone). இந்த வலயம் சீன எல்லைகளுக்கு வெளியே உள்ளது. அதுமட்டுமன்றி சர்ச்சைக்குரிய Diaoyu தீவுகளும் இந்த வலயத்துள் அடக்கப்பட்டுள்ளது. இதை சீனா கடந்த சனிக்கிழமை அறிவித்துள்ளது.
சீனாவின் அறிவிப்புப்படி இந்த வலையத்துள் புகும் எந்தவொரு விமானமும் சீன அரசின் அனுமதியை பெற்றிருக்க வேண்டும். கடந்த காலங்களில் இதே கடலில் அமெரிக்கா கடல்படையும் விமானப்படையும் யுத்த பயிற்ச்களில் ஈடுபட்டதுண்டு. இனிவரும் காலங்களில் ஜப்பான் அமெரிக்கா போன்ற நாடுகள் இவ்விடயத்தில் சீனாவுடன் முட்டி மோதுமா அல்லது விட்டுக்கொடுத்து சீனாவின் சட்டத்தை ஏற்றுக்கொள்ளுமா என்பதை பொறுத்திருந்தான் பார்க்கவேண்டும்.
இந்த அறிவிப்பால் ஜப்பானும் அமெரிக்காவும் பெரும் விசனம் கொண்டுள்ளன. ஆனால் கடந்த காலங்களில் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற பல பலமிக்க நாடுகள் தமது எல்லைகளுக்கு அப்பால் சென்று பாதுகாப்பு வலையங்களை உருவாக்கியுள்ளன.
படம்: XinHua