சில தினங்களுக்கு முன் PKK என்ற Kurdish ஆயுத குழு தாம் பணயம் வைத்திருந்த 13 துருக்கியரை (Turkish) ஈராக்கில் படுகொலை செய்திருந்தது.
முதலில் அமெரிக்கா படுகொலை கொலை தொடர்பாக கவலை மட்டும் தெரிவித்து இருந்தது. படுகொலை செய்தவர்களை சாடவில்லை.
அதனால் விசனம் கொண்ட துருக்கியின் சனாதிபதி Recep Tayyip Erdogan அமெரிக்காவை தாக்கி இருந்தார். அமெரிக்கா பயங்கவாதத்துக்கு எதிரான நாடு என்றால் அது எப்போதும் பயங்கரவாதிகளை கண்டிக்க வேண்டும் என்று அவர் கூறி இருந்தார்.
துருக்கியின் விசனத்தை தணிக்க அமெரிக்கா மீண்டும் Mevlut Cavusoglu என்ற துருக்கி வெளியுறவு அமைச்சரை அழைத்து படுகொலைகளுக்கு PKK குழுவே காரணம் என்று கூறி தூக்கியின் கருத்துடன் இணங்கி உள்ளார்.
இன்று திங்கள்கிழமை துருக்கி சுமார் 718 PKK ஆதரவாளர்களை கைது செய்துள்ளது.
PKK அமெரிக்காவின் ஆதரவில் துருக்கி, சிரியா, ஈரான் சந்திக்கும் பகுதிகளில் உள்ளூர் ஆட்சி செய்யும் ஆயுத குழு. மத்தியகிழக்கில் அமெரிக்கா ஆளுமையை கொண்டிருக்க PKK பிரதான காரணி.
துருக்கியின் விமான குண்டு வீச்சுக்கே 13 பேரும் பலியானதாக PKK கூறி இருந்தது.