2013ம் ஆண்டு இடம்பெற்ற நெல்சன் மண்டேலாவின் (Nelson Mandela) மரணச்சடங்கு நிகழ்வுகளில் இருந்து $700,000 பணத்தை ஊழல் மூலம் கைக்கொண்ட குற்றச்சாட்டில் 15 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த ஊழல் தொடர்பாக செய்திகள் 2014ம் ஆண்டே வெளிவந்து இருந்தாலும் இன்று வெள்ளிக்கிழமையே கைதுகள் இடம்பெற்று உள்ளன.
கைது செய்யப்படோருள் மண்டேலாவின் ANC (African National Congress) கட்சியை சார்ந்த Eastern Cape மாநில சுகாதார அமைச்சர் Sindiswa Gomba, கட்சி அதிகாரி Pumlani Mkolo, முன்னாள் நகர முதல்வர் Zukiswa Ncitha, பேச்சாளர் Luleka Simon-Ndzele ஆகியோரும் அடங்குவர்.
மேற்படி கைதுகள் மண்டேலா சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டு 31வது ஆண்டு நிறைவின் அடுத்த நாளே இடம்பெற்று உள்ளது. மண்டேலா 27 ஆண்டுகள் சிறையில் இருந்தார்.