ஈரான்-மேற்கு முதல்படி இணக்கம், இஸ்ரவேல் குமுறல்

Iran-Nuclear

ஜெனீவாவின் நேரப்படி ஞாயிறு காலை அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, மற்றும் சீனா ஆகிய 6 பலம்மிக்க நாடுகளும் ஈரானும் அணுசக்தி விடயத்தில் 6-மாத கால உடன்படிக்கை ஒன்றுக்கு இணங்கியுள்ளன. ரசியாவும், சீனாவும் ஈரானின் நலன்களை பாதுகாக்க மற்றைய 4 நாடுகளும் ஈரானின் எதிர்ப்பு நாடுகளின் நலன்களை பாதுகாத்தன. வழமை போல் இந்த உடன்படிக்கையும் மூடிய அறைகளுள் பேசி தீர்மானிக்கப்பட்டுள்ளது. விபரங்கள் முற்றாக வெளியிடப்படவில்லை. உண்மையில் இந்த பேச்சுவார்த்தை 2006 ஆம் ஆண்டளவில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இந்த உடன்படிக்கையின் சாரப்படி, அமெரிக்கா ஈரானுக்கு சுமார் $7 பில்லியன் நாணயமாற்றை வழங்கும். சுமார் $4 பில்லியன் வரையான ஈரானின் சொத்துக்கள் மேற்கு நாடுகளில் முடக்கப்பட்டு இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. பதிலுக்கு ஈரான் யுரேனியத்தை 5% க்கு மேல் enrichment செய்யும் வேலைகளை இடைநிறுத்தி வைக்கும்.

அடுத்துவரும் ஆறுமாத காலத்தில் என்ன நடக்கும் என பகிரங்கப்படுத்தப்படவில்லை.

இந்த உடன்படிக்கையை இஸ்ரவேலின் பல பிரமுகர்கள் நிராகரித்து கருத்துக்கள் வெளியிட்டுள்ளனர். சுனி இஸ்லாத்தை சார்ந்த சவூதி அரேபியாவும் சியா இஸ்லாத்தை சார்ந்த ஈரானுடனான இந்த உடன்படிக்கையை விரும்பவில்லை.