இன்று திங்கள் வெளியிட்ட 93 பக்கங்களை கொண்ட அறிக்கை ஒன்றில் தற்போதைய இலங்கை அரசு நீதி மீது தாக்குதல் செய்கிறது என்று கூறியுள்ளது Human Rights Watch அமைப்பு. Open Wounds and Mounting Dangers: Blocking Accountability for Grave Abuses in Sri Lanka என்ற தலைப்பிட்ட அறிக்கை கோத்தபாய அரசின் நடவடிக்கைகளை ஆராய்ந்து உள்ளது.
குறிப்பாக 7 மனித உரிமைகள் வழக்குகளை தற்போதைய அரசு கையாளும் முறை HRW அமைப்பால் கண்டிக்கப்பட்டு உள்ளன. இந்த விசயங்கள் பெப்ரவரி மாதம் 22ம் திகதி இடம்பெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் அமர்வில் விசாரணை செய்யப்படல் அவசியம் என்கிறது HRW.
Lasantha Wickrematunge படுகொலை, Prageeth Ekneligoda மறைவு, சிறையில் இருந்த குற்றவாளியான முன்னாள் இராணுவத்தை (Sunil Ratnayake) விடுதலை செய்தது, திருகோணமலையில் 2006ம் ஆண்டு 5 தமிழ் மாணவர் படுகொலை, 17 பிரெஞ்சு தொண்டர் நிறுவன உறுப்பினர் படுகொலை ஆகிய விசயங்களும் HRW அறிக்கையில் அடங்கும்.
Nishantha Silva என்ற முன்னாள் CID அதிகாரி கோத்தபாய வெற்றியின் பின் நாட்டைவிட்டு தப்பி ஓட காரணமாக இருந்தமை, முன்னாள் CID director Shani Abeysekara வின் கைது ஆகிய விசயங்களும் கூடவே குறிப்பிடப்பட்டு உள்ளன.
பாதிக்கப்படோரின் குடும்பங்களை மிரட்டல், ஜெனீவா செலவுள்ளோரை விசாரித்தால் போன்ற செற்பாடுகளும் நிகழ்வதாக HRW கூறியுள்ளது.